flashvortex.

Thursday, March 8, 2012

ஜெனிவாவில் மேலோங்கும் அமெரிக்காவின் பலம் - அச்சத்தில் சிறீலங்கா

மனித உரிமை பேரவையில் சிறீலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரனைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா முதல்கட்டமாக முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளில் இதுவரை 22 உறுப்பு நாடுகள் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு சிறீலங்கா அரசு கடும் இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், பிரேரணையை ஆதரிப்பதற்கு 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று ஜெனிவாவில் இரண்டாம் கட்டமாக நடைபெறவிருக்கும் இராஜதந்திர சந்திப்புகளில் மேலும் பல நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் என நம்பப்படுகின்றது.

இதனால், சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அங்கு மேலோங்கிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளிடம் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையின் சாராம்சத்தைக் கையளித்து தெளிவுபடுத்தல் நடவடிக்கையொன்றை அமெரிக்கா ஜெனிவாவில் ஆரம்பித்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 24 நாடுகளின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றமுடியுமென நம்பப்படுகிறது.

அந்த அடிப்படையில், ஜெனிவாவில் அமெரிக்காவுக்கு ஆதரவு வலுத்துவருவதால் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணை அறுதிப்பெரும்பான்மையோடு நிறேவேற்றப்படும் என்று மேற்குலக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment