காங்கிரஸ் கட்சியில் நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியை இணைக்கும் பணி, ஆந்திர மாநில சட்டசபையில் சபாநாயகர் என்.மனோகர் முன்னிலையில் நடத்தி முடிக்கப்பட்டது.
அரசியல் சட்டம் 10வது பிரிவின்படி, காங்கிரசில் பிரஜா ராஜ்யம் கட்சியை இணைப்பதற்கு, இரு கட்சிகளையும் சேர்ந்த சட்டசபை கட்சித் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து, அதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டனர். பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசில் இணைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்து, சமீபத்தில் காங்கிரஸ் சட்டசபை கட்சி, தீர்மான பிரதியுடன் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது. இதன் மீது, மாநில சபாநாயகர் மனோகர் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இதற்கு காங்கிரஸ் சட்டசபை துணைத் தலைவர் பி.கிருஷ்ணாரெட்டி, பிரஜா ராஜ்யம் கட்சியின் கொறடா வங்கா கீதா ஆகிய இருவரும் சபாநாயகர் முன் ஆஜராகி, தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் சட்டசபையில் அறிவிக்கப்படும் என, சபாநாயகர் தெரிவித்தார். இதன் பின்னர், 17 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட பிரஜா ராஜ்யம் கட்சியினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களாக சட்டப்படி கருதப்படுவார்கள். மாநில சட்டசபையில் தற்போதுள்ள காங்கிரசின் பலம், 137லிருந்து, 154 ஆக உயரும்.
Friday, March 9, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment