சீன பிரதமர் வென் ஜியாபோ, இந்தாண்டுக்கான பத்திரிகை பேட்டியை அளித்தார். இந்தாண்டின் இறுதியில், அவர் பதவியில் இருந்து இறங்க உள்ள நிலையில், இந்த பேட்டி பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பேட்டியின் போது அவர் கூறியதாவது:சீனாவில், அரசின் கொள்கைகளை மக்கள் விமர்சிக்கக் கூடிய ஒரு சூழல் உருவானால் தான், அரசு தனது கொள்கைகளை மாற்றியமைக்க முடியும். இதுபோன்ற வெற்றிகரமான அரசியல் கட்டமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றால், மாவோ காலத்தில் நிகழ்ந்ததைப் போல, மீண்டும் ஒரு பண்பாட்டுப் புரட்சி ஏற்படும்.
மாவோ காலத்து பண்பாட்டுப் புரட்சி என்பது, வரலாற்றின் மிகப் பெரிய சோகம். மாவோ மனைவி உட்பட நான்கு பேர் கூட்டணி முறியடிக்கப்பட்ட பின், சீனாவின் வரலாற்றை காப்பதற்காக, கட்சி முக்கியமான முடிவுகளை எடுத்தது.பண்பாட்டுப் புரட்சி ஏற்படுத்திய மோசமான விளைவுகளும், நிலப் பிரபுத்துவ முறையின் தாக்கமும், இன்னும் சீனாவில் அழிந்து விடவில்லை.
வருமான ஏற்றத்தாழ்வு, நம்பிக்கையின்மை, ஊழல் போன்ற புதிய பிரச்னைகள் இன்னும் அடியோடு தீர்க்கப்படாத நிலையில், மீண்டும் ஒரு பண்பாட்டுப் புரட்சி ஏற்படலாம். சீனப் பொருளாதாரம், தற்போது ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளால், மந்த நிலையில் உள்ளது என்பது உண்மை தான்.இந்தியாவின் தர்மசாலாவில் இயங்கி வரும் "நாடு கடந்த திபெத் அரசு', திபெத்தை சீனாவிடம் இருந்து பிரிப்பதில் முனைந்துள்ளது.திபெத் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் அனைத்தும், சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாதவை. தலாய் லாமாவின் பிரிவினை முயற்சிகளை, சீனா கடுமையாக எதிர்க்கிறது.இவ்வாறு, வென் ஜியாபோ தெரிவித்தார்.
Saturday, March 17, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment