flashvortex.

Sunday, March 18, 2012

சிறீலங்காவை வீழ்த்த ஜெனிவாவில் மையங்கொள்ளும் அமெரிக்கா

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையை நோக்கிய அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் 100க்கும் மேற்பட்ட இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஈடுபட்டு வருவதாக ஜெனீவாவிற்கான சிறீலங்கா தூதரகம் வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

இந்த அழுத்தங்களை முறியடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் அனைத்துலக சமூகத்தின் பார்வையும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓர் இராஐதந்திர போர் உக்கிரமாக இடம்பெற்று வருவதாகவே அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment