ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல், தமிழகமெங்கும் ஒங்கி ஒலித்து வரும் நிலையில் அதன் தாக்கம் இந்திய தலைநகரிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மட்டுமல்ல, இந்திய மைய ஊடகங்களிலும் சிறிலங்கா விவகாரம் முக்கிய விவகாரமாகியுள்ளது.

புதுடில்லியில் இயங்கும் மிகவும் பிரபல தொலைக்காட்சியான NDTV யில் ஐ.நா மனித உரிமைச் சபையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை மையமாக கொண்டு காரசாரமான விவாதமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விவாதம் இடம்பெற்றது.
இதில் இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் காலம் மக்ரேயும் பங்கு பற்றியிருந்தார். இவர் 'சிறீலங்காவின் கொலைக்களம்' மற்றும் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றம்' என்ற ஆவணப்படத்தின் இயங்குனர் ஆவார்.

No comments:
Post a Comment