ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைகள் செயலமர்வில் அமெரிக்காவின் பலம் அதிகரித்திருப்பதால், சிறீலங்கா அமைச்சர்களுக்கும் கிலி பிடிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் தமது வீர வசனங்களை பேசி சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த வகையில், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களை சிறீலங்காவில் தடை செய்வதன் மூலம் அவர்களின் கொட்டத்தை அடக்க முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச முழங்கியுள்ளார்.
கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க மென்பானங்கள் மற்றும் இணைய வலையமைப்புகளான google, gmail போன்றன அனைத்தினையும் நிராகரிக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பாகும்.
சிறீலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து எமது நாட்டின் வலிமை மற்றும் மக்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்க உற்பத்திப் பொருட்களை நாம் பகிஷ்கரிக்க வேண்டியது அவசியம் இதன் மூலம் அமெரிக் அரசு எமது நடவடிக்கையின் விளைவை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமெரிக்காவின் பரம எதிரியும், சிறீலங்காவின் நெருங்கிய நண்பனுமான சீனாவில் google, Facebook, youtube, gmail என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் அலுவலகங்களையும் நாட்டை விட்டு வெளியேற்றி இருந்தன. அதையொத்த பாணியிலேயே விமல் வீரவன்சவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவைகளில் சிறீலங்காவை காப்பாற்ற நேரடியாக களமிறங்குவதாக சீனா பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Wednesday, March 14, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment