flashvortex.

Wednesday, March 14, 2012

குழம்பிய கூட்டமைப்பு திருந்துமா?

தம்மை தெரிவுசெய்த தமிழ்மக்களுக்கு தெளிவான விளக்கங்களையும், நம்பிக்கையும் அளிக்க தவறிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் என பிரதிநிதித்துவப்படுத்துவோர் , இறுதிநேரத்திலாவது தமிழ்தேசத்தின் நலன் கருதி செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பின்வரும் செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுவிஸர்லாந்து நாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸில் இருந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சுவிஸ் வருமாறு சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்திருப்பதாக கொழும்பை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதற்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பிரித்தானியா செல்வதாகத் தெரிவித்தே அவர் பயணித்ததாகவும் ஆனாலும் சுவிஸ் சென்ற விடயம் தமக்குத் தெரியாது என்று கூட்டமைப்பின் இள நிலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விசனம் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை, அண்மையில் சிறீதரன் ஜெனீவா செல்லாமைக்கான காரணங்கள் மூன்று என்று சரிதம் வெளியிட்டிருந்த செய்தியில் உண்மை இல்லை என்று சுவிஸ் பயணத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் சிறீதரன் ஊடகவியலாளர்கள் மத்தியில் தனிப்பட்ட ரீதியில் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருக்கின்றார். குறித்த தகவலை சரிதம் இணையத்தளத்திற்கு கிடைக்கும் வகையில் தெரிவித்திருந்தவர் தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணி முக்கியஸ்தர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட காரணங்களுக்காகக் கூட சுவிஸ் ஜெனீவா செல்லவேண்டாம் என்று அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தனக்கு அறிவுரை கூறியதாகத் தெரிவித்த சிறீதரன் எம்பி திடீரென சுவிஸ் சென்றதுடன் ஏனையோருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றமைக்கான காரணம் குறித்து எதுவும் தெரியவரவில்லை.

No comments:

Post a Comment