நடிகையம், திமுக உறுப்பினருமாகிய குஷ்பு ஐ.நா. சபை கூட்டத்தில் பேசவுள்ளார். இதற்காக வரும் 14ம் திகதி தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து கென்யாத் தலைநகர் நைரோபி செல்கிறார்.
இது தொடர்பில் நடிகை குஷ்பு தெரிவிக்கையில்; அடுத்த தலைமுறையினராகிய இளைஞர்களின் கையிலேயே நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. 2013ம் ஆண்டில் இளைஞர்களின் திறமைகளை சிறப்பிக்கும் திட்டமொன்றினை ஐ.நா முன்னெடுக்கவுள்ளது. இதற்காக ஐ.நா. சபையின் இளைஞர் அமைப்பு வரும் 15ந் திகதி முதல் 18ந் திகதி வரை கென்யா தலைநகர் நைரோபியில் கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளது.
இக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதில் வாழ்க்கையின் அடித்தட்டு நிலையிலுள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது தொடர்பில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் 14ம் திகதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நைரோபி செல்லும் குஷ்பு, 'இளைஞர்களின் வளர்ச்சி' என்ற தலைப்பில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment