நடிகர் சிரஞ்சீவிக்கு காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸுடன் இணைத்த போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படி, சிரஞ்சீவிக்கு எம்.பி பதவி வழங்கப்படவிருந்தது. தற்போது ஆந்திராவை சேர்ந்த 6 மாநிலங்களை உறுப்பினர்கள், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.
காங்கிரஸை சேர்ந்த நால்வரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்த இருவரும் இவ்வெற்றிடங்களை நிவர்த்தி செய்யவுள்ளனர். அவர்களில் ஒரு இடத்த சிரஞ்சீவிக்கு வழங்குவதற்கு கட்சி தலைமை முடிவெடுத்துவிட்டதாகவும், இதையடுத்து சிரஞ்சீவி தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ சோதனை முடிந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடு திரும்பியுள்ள நிலையில் சிரஞ்சீவிக்கு பதவி வழங்குவது தொடர்பான மும்முரமான செயற்பாடுகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக திகழ்ந்த சிரஞ்சீவில் ஆந்திர அரசியலில் பிரஜா ராய்ஜம் எனும் கட்சியை தொடக்கி அரசியலில் உள்நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
Tuesday, March 6, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment