பாக்.,முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப்பைத் தேடுவதற்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சி, இன்டர்போலை நாடுவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பெனசிர் கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன.
தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். இவ்வழக்கு தொடர்பாக அவரைத் தேடிப் பிடிப்பதற்காக சர்வதேச போலீசான இன்டர்போலை நாடுவது என பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதையடுத்து இன்டர்போலைத் தொடர்பு கொண்டு, முஷாரப்பைத் தேடுவதற்காக சிவப்பு நோட்டீஸ் விடக் கோருவதற்கு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
Thursday, March 1, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment