மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற போதும் குறித்த சம்பவத்திற்கும் குறித்த சந்தையில் உள்ள வர்த்தகர்கள் சிலருக்கும் தொடர்புள்ளமை மக்களின் கருத்துக்களின் படி தெரிய வந்திருப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்விடையம் தொடர்பில் அவ் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரியவருகையில்,
நேற்று 1 ஆம் திகதி அதிகாலை 2-30 மணியளவில் மன்னார் தினச்சந்தை வியாபார நிலையம் இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்தி எரியூட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் போது குறித்த சந்தையில் 55 இற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் காணப்பட்டது.
குறித்த சம்பவத்தில் 35 வியாபார நிலையங்கள் எரிந்து சாம்பலாகியது.
இதன் போது பல கோடி ரூபாய் பொருமதியான வியாபாரப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை 01 ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது.
ஆனால் நேற்று அதிகாலை 1 மணியளவில் குறித்த சந்தையில் பின் பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலர் லொரிகளில் இரவோடு இரவாக வியாபார பொருட்களை ஏற்றியுள்ளனர். இதனை மன்னார் பிரதேச வாசிகள் பலர் பார்த்துள்ளனர்.
சுமார் 15 கடைகள் வரை தீ பிடிக்காமல் காணப்பட்டுள்ளது. குறித்த கடைகளில் சம்பவ தினம் அன்று வியாபாரிகள் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சந்தையில் தீ ஏற்பட்டவுடன் இவர்கள் எவரும் இத்தகவலை உரியவர்களுக்கு அறிவிக்கவில்லை.
மாறாக பொது மக்களினால் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதினைத் தொடர்ந்தே தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
-இன்று வெள்ளிக்கிழமையுடன் இவர்களை எழும்ப மன்னார் நகர சபை இவர்களுக்கு வழங்கியிருந்த இருதி காலக்கேட்டிற்கு எதிராகவும் மன்னார் நகர சபையிற்கு கலங்கத்தை ஏற்படுத்தி சுமையினை அவர்கள் மீது தினிக்க குறித்த வியாபாரிகள் மேற்கொண்டுள்ள சதி என தெரிய வருகின்றது.
நகர சபை குறித்த வியாபாரிகளை வெளியேற்ற மேற்கொண்ட சதி என தீ வைத்த வர்த்தகர்கள் கட்டுக்கதை பரப்பி வருகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்காலங்களில் குறித்த சந்தை மீண்டும் வாராந்த சந்தையாக மாற்றி அணைந்து வியாபாரிகளும் தொழில் செய்யும் இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கிள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Friday, March 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment