விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ள அவர், இந்த நகர்வு நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகரகமவில் பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற வழிபாட்டை அடுத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பங்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் நன்றாக கவனிக்கப்படுவதை உதாரணம் காட்டியுள்ள அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரையும் நன்றாக பராமரித்ததாகவும் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Monday, March 12, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment