
கடந்த மாதம் 26ஆந் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முதலாவதாக காலை 7.40 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது.
4 ரதவீதிகளையும் சுற்றி வந்த தேர் 8.10 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தேருக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
`வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', `கந்தனுக்கு அரோகரா', `முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷங்களை முழங்கியபடி ரத வீதிகளில் தேர் இழுத்தனர். தேருக்கு முன்னும், பின்னும் முருக பக்தர்கள் காவடி எடுத்து ஆடி வந்தனர். தேருக்கு முன்னால் மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட 2 யானைகள் சென்றன. இதைத்தொடர்ந்து தேரடி மாடசாமி ஆடி வந்தார். பக்தர்கள் நேர்த்திக் கடனாக தேருக்கு அரளிப்பூ மாலை போட்டு வழிபட்டனர்.
இன்று (புதன்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை சுவாமி, அம்பாள் பூங்கேடய சப்பரத்தில் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ___
No comments:
Post a Comment