flashvortex.

Wednesday, March 7, 2012

உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது _

உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக் கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு, பிரசாரமொன்றின் போது படுகொலை செய்யப்பட்டார்.

அந்நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த முஷாரப் அரசின் கவனக்குறைவே இச்சம்பவத்திற்குக் காரணம் என்று கூறி இது தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க அவருக்கு பிடியாணை அனுப்பியது நீதிமன்றம். ஆனால், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் தோல்விக்குப்பின் லண்டன், டுபாய் என மாறிமாறி வசிக்கும் முஷாரப் இதைப் பொருட்படுத்தவில்லை. பிடியாணை பிறப்பித்தும் முஷாரப்பைக் கொண்டுவர பாகிஸ்தான் அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து முஷாரப்பைப் பிடிக்க இன்டர்போல் பொலிஸ் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி இஸ்லாமாபாத் அருகே உள்ள முஷாரப்பின் பண்ணை வீட்டிற்கு நேற்று சென்ற அதிகாரிகள், வீட்டுக்கதவில் நீதிமன்றத்தின் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது.

இதில் மார்ச் 22 இல் உச்ச நீதிமன்றத்தில் முஷாரப் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் தான் பாகிஸ்தான் குடிமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ___

No comments:

Post a Comment