flashvortex.

Wednesday, March 7, 2012

இலங்கையில் ஆட்கடத்தல் மற்றும் காணாமல்ப் போதல்கள் அதிகரித்துள்ளன: ஐரோப்பிய ஒன்றியம்.

இலங்கையில் காணாமல்போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்தல் தொடர்பான செயற்குழு தனது அணியொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை அதிகாரிகள் பதில் கிடைத்துள்ளதாக என ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.

மனித உரிமைக் காவலர்களின் சூழ்நிலை தொடர்பான விசேட அறிக்கையாளர் மார்கரெட் சேகாக்யா இது தொடர்பாக கூறுகையில், இலங்கையில் மனித உரிமைக் காவலர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தனது ஆணைக்குட்பட்ட பாதுகாப்பை கோரினால் பதிலடியை எதிர்நோக்குவதாக தெரிவித்தார். தேசிய ஊடகங்களின் பாதுகாப்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் சகிதம் தற்போதுள்ள தற்போதுள்ள சூழ்நிலை தனது பெரும் கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச பொறிமுறையொன்று தேவையென ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக கூட்டத்தொடரில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. பொறுப்புடைமை தொடர்பாக இலங்கை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் அவை அனைத்துமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகுவதற்குமுன், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படக்கூடிய தீர்மானமொன்றை தவிர்ப்பதற்கான அவசர செயற்பாடுகளாகும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment