தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
÷ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகள் பதிவான இந்த நிலநடுக்கத்தால், பொருள் மற்றும் உயிர்ச் சேதம் எதுவும் நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை.
÷தில்லியின் எல்லையில் அமைந்துள்ள ஹரியாணாவின் பகதூர்கார் பகுதியை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 விநாடிகள் நீடித்த இந்நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீடுகளில் இருந்தும், அலுவலகங்களில் இருந்தும் வெளியேறினர். உயிர்ச் சேதம் குறித்தோ, பொருள் சேதம் குறித்தோ தகவல் ஏதும் இல்லை என்று இந்திய புவியியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ÷இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் உணர முடிந்தது.
÷இந்த நிலையில், அமெரிக்க புவியியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தில்லி அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அலகுகளாகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது.
÷இந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 19 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய புவியியல் துறை அறிவித்துள்ள 30 நகரங்களில் தில்லியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment