ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சிறீலங்கா விவகாரம் குறித்து கவனம் செலுத்தும் என மனித பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினால் பரிந்துரை செய்யப்பட்ட சில விடயங்கள் குறித்து இன்னமும் கவனம் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளார்.
நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கங்களின் முதன்மைக் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Saturday, March 3, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment