Garges-lès-Gonesse இலுள்ள Honoré-de-Balzac வீதியில் அமைந்துள்ள தமது வீட்டில் பாகிஸ்தானியக் குடும்பம் ஒன்று மகிழ்வாக இருந்தது. 16 மணியளவில் அழைப்பு மணி அழைத்ததை அடுத்து 45 வயதுத் தந்தை கதவைத் திறந்துள்ளார். வெளியில் நான்கு பேர் நின்றிருந்தனர். அதில் ஒருவன் கையில் இயந்திரத் துப்பாக்.கி
தந்தை, தாய் மற்றும் மூன்று பிள்ளைகளும் ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டனர். அவர்கள் கைகள் கட்டப்பட்டன. தாய் தந்தையர்க்கும் 13 மற்றும் 14 வயதுக் குழந்தைக்கு முன்னும் இயந்திரத் துப்பாக்கியுடன் நின்றவன் 2 வயதுக் குழந்தையின் தலையில் துப்பாக்கியை அழுத்தியபடி நின்றிருந்தான்.
நான்கு நிமிடங்களுக்குள் மற்றவர்கள் வீட்டிலிருந்த பெறுமதி மிக்க பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர். மடிக் கணினி, செல்பேசி, பெறுமதி மிக்க நகைகள் மற்றும் ஆயிரக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.வெளியேறும் போது அவர்கள் இருந்த அறையையும் வீட்டையும் பூட்டிவிட்டுச் சாவியையும் கொண்டு சென்றுள்ளனர்.
இது நடந்தது கடந்த யூன் மாதம் 1ம் திகதி. உடனடியாகக்காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. CERGYகாவற்துறையின் சட்டவியற் பிரிவினர் (PJ) விசாரணையைத் தம் கையில் எடுத்தனர்.
வீட்டைச் சோதனையிட்ட இவர்கள் (PJ) கொள்ளையர்களில் ஒருவன் விட்டுச் சென்ற முக்கிய தடயமொன்றைக் கைப்பற்றினார்கள். முதற் தடயம் அந்தக் குழுவினரை அடையாளம் காண உதவியது. இதன் உதவியாகக் காட்டப்பட்ட புகைப்படங்களில் 34 வயதுடைய தாயார் கொள்ளையர்களில் ஒருவனை அடையாளம் காட்டினார். உடனடியாக நீதவானின் அனுமதியுடன் அடையாளம் காணப்பட்ட இருவரும் நவம்பர் மாத இறுதியில் அவரவர் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுச் சிறையிடப்பட்டனர். இவர்களில் ஒருவர் வீட்டில் யூன் மாதம் கொள்ளையடிக்கப்ட்ட நகைகளின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டது.
அதனையடுத்து தொடர்ந்த விசாரணையில் மற்றைய இருவரும் கடந்த புதன்கிழமை கைது செய்ப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் 20 வயதுடையவர்கள்,ஒருவர் 17 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர்கள் Garges மற்றும் Persan ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். காவற்துறை முழுமூச்சுடன் இறங்கினால் எந்தத் திருடனையும் பிடிக்க முடியும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.
No comments:
Post a Comment