flashvortex.

Sunday, March 4, 2012

ஜெனீவா சென்ற மஹிந்த சமரசிங்க மூக்குடைபட்டு நாடு திருப்பினார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட சிறீலங்காவின் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர்ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
அமைச்சர் சமரசிங்க ஒத்துழைப்புடன் செயற்படவில்லை என அமைச்சர் பீரிஸ் ஜனாதிபதியிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
 
அமர்வுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை மஹிந்த சமரசிங்க தமக்கு வழங்கவில்லை என பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இந்த விடயம் குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்யாது பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஜெனீவா செயலமர்வுக்கு படையெடுத்த சிறீலங்காவின் அமைச்சுக் குழுவிற்கு தானே பொறுப்பானவர் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தன நிலையில் அந்த இடத்திற்கு தமிழ் பெண்மணியான தமரா குணநாயகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவினால் நியமிக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றத்துடன் சமரசிங்க நேற்று நாடு திருப்பியுள்ளார். நியமித்து விட்டதால் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment