flashvortex.

Sunday, March 4, 2012

ரஷ்யா: 3வது தடவையும் அதிபராகும் முயற்சியில் புடின்

ரஷ்யாவில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த அதிபர் தேர்தல் நடைபெற்றுவருகின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பிரதமராக இருந்த விலாடிமீர் புடின் இந்தத் தேர்தல் மூலம் மூன்றாவது தடவையாகவும் அதிபராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தோற்கடிக்கப்பட்டவர்கள்.
புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த பரவலான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிட்டுள்ளார்.

பலத்த போட்டி

ரஷ்யாவுக்கு தேவைப்படுகின்ற உண்மையான தலைவராக புடின் திகழ்வாரா அல்லது அங்கு ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா என்பது இம்முறை தேர்தல் மூலம் தெரிந்துவிடும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
மாஸ்கோவில், மனைவியுடன் வாக்களித்த புடின், இந்தத் தேர்தலில் அதிகளவானோர் வாக்களிப்பார்கள் என்றும் மக்கள் பொறுப்புடன் செயற்படுவாடுகள் என்றும் நம்புவதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நான்காவது தடவையாகவும் இம்முறை போட்டியிடுகின்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெனாடீ ஜூகானோஃப் தான் புடினுக்கு சவாலாக இருப்பார் என்று கூறப்படுகின்றது.
இந்தத் தேர்தலில் புடின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாமல் போனால், அவருக்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்றவரை இரண்டாம் சுற்று வாக்குப் பதிவில் புடின் எதிர்கொள்ள நேரிடும்.
தேர்தல் முறைகேடுகள் நடக்கலாம் என்ற அச்சம் அதிகரித்திருப்பதால் ஆயிரக்கணக்கான தன்னார்வ அணியினர் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment