flashvortex.

Saturday, March 10, 2012

ஐனாதிபதி மஹிந்தருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அமெரிக்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரனையால் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதனால்  பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, கண்டியில் ஐனாதிபதி மஹிந்த  ஓய்வெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆசிய- ஓசியானியா பிராந்திய 12வது மாநாட்டில் ஐனாதிபதி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 
ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உடல் நலக்குறைவினால் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவர், நிகழ்வில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதிகளுக்கு அறிவித்தார்.

ஆனால் சிறிலங்கா அதிபர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்படவில்லை என்றும் ஜெனிவா தீர்மானம் குறித்து அறிந்ததும் குழப்பமடைந்த அவர் கண்டியில் உள்ள அதிபர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் அவர் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிசை சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment