ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தமாதம் 27ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நான்கு வாரகால கூட்டத்தொடர் அடுத்தவாரத்துடன் நிறைவடைகிறது.
கூட்டத்தொடரின் நிறைவுக்கட்டத்தில் எதிர்வரும் 22ம் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளையும் நெருக்கடிகளையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கென வொசிங்டனில் இருந்து மேலதிகமாக 100 இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது சிறிலங்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தீவிர பரப்புரைகள் மற்றும் ஆயத்தங்களை அடுத்து எழுந்துள்ள புதிய சூழல் குறித்து விழிப்பாக இருக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை எச்சரிக்கை செய்துள்ளது.
அதேவேளை, சிறிலஙகாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு கோரி அமெரிக்க - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுக்கள் ஆபிரிக்க மற்முறு லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saturday, March 17, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment