flashvortex.

Saturday, March 17, 2012

மேற்குலகம் எம்மை தாக்கினால் திருப்பி தாக்குவோம் : பசில் ராஜபக்ஷ

ஜெனிவா கூட்டத் தொடரில் சிறீலங்கா மீது தாக்குதல் நடத்தினாலும், அது நாட்டின் மீது படாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பசில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் போர்க்குற்றத்தினை அடிப்படையாக கொண்டு சிறீலங்கா மீது தாக்குதல் நடத்தினாலும் அது நாட்டின் மீது படாது என தெரிவித்துள்ளார். 
அனைத்துலக ரீதியாக எமக்கு நிறைய நண்பர்கள் இருப்பதால், மேற்குலக நாடுகள் இலங்கை மீது எவ்வாறான பொருளாதார தடைகளை விதித்தாலும் அதனை எதிர்கொள்ளும் பலம் எம்மிடம் இருப்பதாக சண்டித்தனம் காண்டியுள்ளார் பசில்.

சிறீலங்கா புதிய ஏற்றுமதி சந்தையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில்,  நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசியல் பிரச்சினைகளில், பொருளாதார விடயங்களை அடிப்படையாக எடுத்து எடுத்து கொள்ளக் கூடாது. எனினும் மேற்குலக நாடுகள் அதனை செய்கின்றன.  இதன் மூலம் எமது இறையாண்மைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.  

சிறீலங்காவிற்கு மாத்திரம் இன்றி முழு ஆசியாவின் பொருளாதாரத்திற்கும் அழுத்தங்களை கொடுக்க மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஒரு கதையும், சர்வதேசத்திடம் இன்னொரு கதையும் சொல்லி அரசியல் பிழைப்புக்காக இரட்டை வேடும் போடும் இவர்கள் வீரவசனம் பேச மட்டுமே தகுதியானவர்கள் என்பதை காலம் விரைவில் உணர்ந்தும்.

No comments:

Post a Comment