flashvortex.

Saturday, March 17, 2012

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

இலங்கை அதிகாரிகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதாயின் அதனை முற்கூட்டியே அறிவிக்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்களது வருகையை முற்குட்டியே தெரியும் பட்டசத்தில் தான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே அவர்களது வருகை முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டும் என ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனை பரிசீலனை செய்த இந்திய பிரதமர் இம் உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் சகோதரியையும் அவரது கணவனையும் தாக்க முற்பட்ட சம்பவத்தையும் இக் கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையைச் சேர்ந்த அமைச்சர், பேராசிரியர்கள் என அண்மைக்காலத்தில் பலர் இந்தியாவில் எதிர்ப்புக்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment