சிறீலங்காவிற்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளதாகத் ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் தொடர்பில் பல நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பில் பல நாடுகளுடன் அமெரிக்கா உத்தியோகப் பற்றற்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்பிரச்சார நடவடிக்கைகளை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா.
இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழு வீச்சில் செயற்பட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் தொடர்பில் பல நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பில் பல நாடுகளுடன் அமெரிக்கா உத்தியோகப் பற்றற்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்பிரச்சார நடவடிக்கைகளை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராவார். உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு அவர் பெரிதும் உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி கார்ட்டர், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதினால் குறித் நாடுகளின் ஆதரவு அமெரிக்காவிற்கு கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. பல நாடுகள் நேரடியாக தமது ஆதரவினையும் தெரிவித்துள்ளன.
முன்னதாக தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராளி என்று வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவை தலைமையாகக் கொண்ட "த எல்டர்ஸ்' அமைப்பு ஜெனிவாவில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகள் ஆதரிக்க வேண்டுமென கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பில் ஜிம்மி கார்ட்டரும் ஒரு முக்கியமான உறுப்பினர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஏற்கனவே பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஜிம்மி கார்ட்டரின் வருகையும் சிறீலங்காவிற்கு பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பிரச்சார முனைப்புக்களை முறியடிக்கும் நோக்கில் சிறீலங்காவின் தூதுக் குழுவினரும் பல நாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment