சிரியாவில் செவ்வாயன்று காணாமல் போன இரு துருக்கிய ஊடகவியலாளர்களைக் கண்டறியும் முயற்சிகளுக்கு உதவுமாறு அவர்களின் குடும்பத்தினரும் சகாக்களும் துருக்கி அரசைக் கோரியுள்ளனர்.
ஜெர்செக் ஹயாத் பத்திரிகையின் மத்திய கிழக்கு நிருபரும் மிலாட் பத்திரிகையின் கட்டுரையாளருமான அடெம் ஒஸ்கோஸ் மற்றும் சுயாதீன புகைப்படப் பிடிப்பாளரான ஹமீட் கொஸ்கொன் ஆகிய இருவருமே ஒரு வாரத்துக்கு முன் தென் துருக்கியிலிருந்து சிரியாவுக்குச் சென்றுள்ளனர்.
இரு பத்திரிகையாளர்களும் 4 நாட்களுக்கு முன் அவர்களது குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு சிரிய நகரான இட்லிப்பிற்கு தாம் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதேவேளை எதிர்ப்பாளர்களுடனான கடும் மோதல்களின் பின் புதன் கிழமை இட்லிப் நகர் அரசாங்கப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. _
Friday, March 16, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment