விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பான முறையில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான சனல்4 தொலைக்காட்சியின் காணொளி ஜெனிவா மனித உரிமை பேரவையில் திரையிடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கு கொள்ள சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான கெல்லம் மெக்ரே, ஜெரம் ஜேஸ், ஜோன் ஸ்நோ ஆகியோர் லண்டனில் இருந்து ஜெனிவா சென்றுள்ளனர்.
'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற பெயரியல் இக்ணொளி வெளிவரவுள்ளது.
சனல்4 தனது இந்த வீடியோ படத்தை நாளைய தினம் (14) ஜெனிவாவில் தூதரக அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்க உள்ளது.
எவ்வாறாயினும் குறித்த காணொளியில் விடுதலைப்புலிகளின் போர் குற்றங்கள் தொடர்பில் எந்த தகவல்களும் உள்ளடக்கப்படவில்லை எனவும் இது போலியான வீடியோ படம் எனவும் திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
Tuesday, March 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment