ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் அமெரிக்காவில் வலையில் வசமாக மாட்டிக் கொண்ட சிறீலங்கா, தப்பித்துக் கொள்ள பல இராஐதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அறிந்ததே.
இந்நிலையில் சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடப்படவுள்ள 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' எனும் விபரண காணொளியில் சிறீலங்கா படையினரினால் மேற்கொள்ளப்பட்ட அதிர்ச்சியளிக்கும் போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியாகவுள்ளன. இது சிறீலங்கா அரசிற்கு மேலும் ஒரு சத்திய சோதனையாக மாறவுள்ளது.
சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடப்படவுள்ள காணொளிக்கு பதிலளிக்கும் வகையில், இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற விதம் குறித்து திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் ஜகத் ஜயசூரிய வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்த படைத்தரப்பினர் இந்த திரைப்பட தயாரிப்பில் பங்கு கொள்ளவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சனல் 4 வெளியிடவுள்ள காணொளியில் தலைவர் பிரபாகரன் உண்மையில் மரணமானரான என ஆய்வுத் தகவல்களை வெளியிடவுள்ளதான செய்திகள் கசிந்ததன் பின்னணியில் இராணுவத்தினர் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment