இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளை சிறீலங்கா படையினர் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடவுள்ள சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் அடங்கிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணபடத்தினை தயாரிக்கும் Callum Macrae னால் எழுத்தப்பட்ட கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை த இன்டிபென்டென்ட் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தலைவர் பிரபாரகனின் இளைய மகனான பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்டு நிலத்தில் கிடத்தப்பட்டு இருக்கின்றார். இடுப்புக்கு கீழ் ஆடை இல்லை. இவரின் நெஞ்சுப் பகுதியின் ஐந்து இடங்களை ஒவ்வொரு சன்ன்ங்கள் துளைத்து இருக்கின்றன என Callum Macrae தனது பந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான இவர் நீதிக்குப்புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சடலத்துக்கு அருகில் ஐவரின் சடலங்கள் காணப்படுகின்றன. இவர்கள் பாலச்சந்திரனின் மெய்ப் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். நிர்வாணமாக தரையில் கிடத்தப்பட்டு இருக்கின்றனர்.
கண்கள் கட்டப்பட்ட பின்னர் அனைவரும் சுடப்பட்டு இருக்கின்றார்கள் என்று தோன்றுகின்றது.
மேலதிகமாக சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல விடுதலைப் புலிப் போராளிகளுக்கும், முன்ணித் தலைவர்களும் சிறுவர்களும் கூட சிறீலங்கா படையினரினால் நீதிக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்துள்ளனர். அதற்கு இதுவும் ஒரு சான்று என தெரிவித்துள்ளார்.
Sunday, March 11, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment