flashvortex.

Sunday, March 11, 2012

முதல்வர் பதவியை 38 வயது மகனுக்கு வழங்கிய முலாயமுக்கு பாராட்டு

தலைவரும், முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ், வரும் 15ம் தேதி பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பதவியேற்கின்றனர். 38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்கிற்கு, நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேநேரத்தில், தள்ளாத வயதிலும் விடாப்பிடியாக பதவியில் நீடிக்கும் பல அரசியல்வாதிகளுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, 224 இடங்களை பெற்று, தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, புதிய முதல்வராக, 73 வயதான முலாயம் சிங் தேர்வு செய்யப்படுவாரா அல்லது 38 வயதான அவரது மகன், அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில், உ.பி., மாநிலத்தின் அடுத்த முதல்வராக, அதாவது சட்டசபை கட்சித் தலைவராக முலாயம் சிங்கின் மகனான, 38 வயது அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அகிலேஷ் யாதவ் முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்ட, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கானே, அகிலேஷ் பெயரை முன்மொழிந்தார்; முலாயம் சிங்கின் சகோதரர், சிவ்பால் சிங் யாதவ் வழிமொழிந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக, சட்டசபை கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். வரும் 15ம் தேதி, அவர் முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பதவியேற்பர். இதன்மூலம், உ.பி., மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையை பெறுவார்.
முலாயமிற்கு பாராட்டு: இளைஞராக இருக்கும் அகிலேஷை முதல்வராக்குவதா என, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தி, மகனான அகிலேஷுக்கு பதவியை வழங்கியுள்ளார், முலாயம் சிங்.

 
இதன்மூலம், அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இளைஞர் மற்றும் பொறியாளரான அகிலேஷ், மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பதன் மூலம், பின்தங்கிய, உ.பி., மாநிலம் பெரும் வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்பப்படுகிறது.
மூத்த தலைவர்கள் அதிர்ச்சி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றவர்கள், 88 வயதை எட்டிய போதும், கட்சியின் தலைமைப் பதவியை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்காமல், பதவியில் தொடர்கின்றனர். அதேபோல், வேறு பல மாநிலங்களில் உள்ள தலைவர்கள் சிலரும், பதவியை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், மகனுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த முலாயம் சிங்கின் செயல், இதுபோன்ற தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
முன்னர் யார் யார்? இதற்கு முன், 1995ம் ஆண்டில், தன்னுடைய, 39வது வயதில், மாயாவதி முதல்வரானார். அசாம் கனபரிஷத் கட்சியின் தலைவரான பிரபுல்ல குமார் மகந்தா, 1985ம் ஆண்டில், அதாவது தன்னுடைய, 31வது வயதில், அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லாவும், தன்னுடைய, 39வது வயதில், முதல்வர் பதவியைப் பிடித்தார். அந்த வரிசையில், தற்போது அகிலேஷ் யாதவும் சேர்ந்துள்ளார்.

காங்கிரஸ் - பா.ஜ., வாழ்த்து: உ.பி.,யின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அகிலேஷ் யாதவிற்கு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வாழ்த்துத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், ""புதிய முதல்வராக தேர்வாகியுள்ள அகிலேஷûக்கு என் வாழ்த்துக்கள். மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அவரும், அவரின் கட்சியும் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார். பா.ஜ., கட்சியின் தகவல் தொடர்பாளர் விஜய் பதக் லக்னோவில் கூறுகையில், ""அகிலேஷ் சிறப்பான நிர்வாகத்தை தருவார் என, நம்புகிறோம். ஊழல் பிரச்னைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல், அவரது அரசு செயல்பட வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment