ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரும் தீர்மானத்தில் தளர்வு போக்கினை கடைப்பிடிக்குமாறு இந்திய அரசினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் அமெரிக்கா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளது.
இதற்கமைய ஜெனிவாவில் நிலைகொண்டுள்ள இந்திய இராஜதந்திரிகள், அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சிறீலங்கா விவகாரம் தொடர்பில் முக்கியமான பேச்சுகளை நடத்தியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா மாநாட்டில் சிறீலங்காவை ஆதரிக்கப் போவதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்தே, இந்தியா தனது மௌனத்தைக் கலைத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறீலங்காவில், சீனாவின் ஆதிக்கம் தலை தூக்கும் அபாய நிலையினை கருத்திற் கொண்டே இந்திய இந்த தீர்மானத்திற்கு வந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்குலக நாடுகளுக்கும், சிறிலங்காவிற்கு இராஜதந்திர போர் உக்கிரமடைந்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், சிறீலங்கா விவகாரம் தொடர்பில் வொஷிங்டனுடன் பேச்சுகளை முன்னெடுத்துள்ள இந்தியா, கொழும்புக்கு எதிரான பிரேரணையைத் தடுத்துநிறுத்தும் வகையில் காய்நகர்த்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்குமாறும் இந்தியா அந்நாட்டிடம் கோரியுள்ளது.
போரின் பின்னரான சிறீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்காவிற்கு, இந்தியா விளக்கமளித்துள்ளது. அதேவேளை, இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் அமெரிக்காவின் பதில் அமைந்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறீலங்கா அரசு, சர்வதேசம் வழங்கிய சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டது. எனவே, இனிமேலும் கால அவகாசத்தை வழங்க தாம் தயாரில்லை எனத் மனித உரிமை மாநாட்டில் அமெரிக்க தெரிவிந்திருந்தமை, குறித்த தீர்மானம் சபைக்கு வந்தேதீரும் என ஆணித்தரமாக குறிப்பிட்டதாகவே அமைந்திருந்தது.
அமெரிக்கா தனது கோரிக்கையை நிராகரித்ததால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்புநாடுகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது அறிய முடிகின்றது.
எது எப்படியிருப்பினும், சிறீலங்கா தொடர்பிலான பிரேரணை, வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதனை 25இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிப்பதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுவதாக தற்போதைய கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, March 6, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment