flashvortex.

Tuesday, March 6, 2012

தென்னாபிரிக்காவிடம் ஆதரவு தேடிச் செல்லும் சிறீலங்கா

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தென்னாபிரிக்காவின் சர்வதேச தொடர்பு, ஒத்துழைப்பு அமைச்சர் மெய்டெ ன்கோனா-மஸபானே ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போதைய சிறீலங்காவின் அரசியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தென்னாபிரிக்காவின் சர்வதேச தொடர்பு, ஒத்துழைப்பு அமைச்சருக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் மெய்டெ ன்கோனா-மஸபானே கடந்த 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வருகை தந்திருந்தார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு நவம்பர் மாதமும் சிறீலங்காவிற்கு வருகைத் தந்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று ஒத்துழைப்பு பேச்சுவார்தைகள் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் இன்று மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment