இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீண் தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்று காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜெüரி பகுதிக்கு வந்தபோது இஸ்லாமுக்கு எதிராக தொகாடியா கருத்து தெரிவித்ததாக கிலானி குற்றம்சாட்டியுள்ளார்.
"தொகாடியாவின் கருத்தை கிலானி கண்டித்துள்ளார். உடனடியாக தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்' என்று ஹூரியத் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தோடா, ரஜெüரி, பூஞ்ச், கிஷ்துவார் பகுதிகளில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின்போது தொகாடியாவின் கருத்துக்கு எதிராக குரல் கொடுக்குமாறும் கிலானி அழைப்பு விடுத்துள்ளார்.
Friday, March 9, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment