பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ-யிடமிருந்து பணம் பெற்றதாக வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் பேகம் காலிதா ஜியா மீது பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளும் அவாமி லீக் கட்சி புதன்கிழமை நடத்திய பேரணி ஒன்றில் பேசுகையில் இக்குற்றச்சாட்டை அவர் சுமத்தினார். 1991-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அளித்த ரூ.50 கோடி நிதியுதவியை காலிதா ஜியா பெற்றுக் கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவுடன் நட்புரீதியாக இருப்பதாகத் தனது கட்சியைக் (அவாமி லீக் ) கருதுவதாலேயே, இந்த நிதியுதவியை ஐஎஸ்ஐ மேற்கொண்டுள்ளதாகவும் ஹசீனா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தது:
"" இனப்படுகொலையை நடத்தியவர்களிடம் நீங்கள் (காலிதா ஜியா) நாட்டை விற்றுவிட்டீர்கள். வங்கதேச மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தோற்றுப் போனவர்களிடம் இருந்து எதற்காகப் பணம் பெற்றீர்கள். ஒருநாள் இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் கூற வேண்டியிருக்கும். பணம் பெற்ற பின்னரே 1971-ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தின்போது குற்றமிழைத்ததாகக் கூறப்படுபவர்களைப் பாதுகாக்க முனைந்தீர்கள். போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் வங்கதேச மண்ணிலேயே நடத்தி முடிக்கப்படும்'' என்றார்.
ஹசீனாவின் குற்றச்சாட்டுகளை காலிதா ஜியாவின் வங்கதேச மக்கள் கட்சி (பிஎன்பி)மறுத்துள்ளது.
Friday, March 9, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment