பண்ணாகம் விசவத்தனை முருகன் கோவில் இன்று இடம்பெற்ற கும்பாவிஷேக நிகழ்வின் போது கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற கும்பாவிஷேக நிகழ்வில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையில் இருந்து சென்ற சிங்கள குழுவினரே இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தாலிக்கொடி உட்பட சுமார் 15 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகைள கொள்ளையடித்துள்ளனர்.
தகவல் அறிந்த கிராம இளைஞர்களை குறித்த கும்பலை பிடித்ததுடன், நையடைப்பும் செய்துள்ளனர்.
விசயம் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்து கொள்ளையர்களை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
சப்பிரகமுவ பிரதேசத்தை சேர்ந்த ஐவர் அடங்கிய குழுவொன்றே குறிந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Wednesday, March 14, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment