flashvortex.

Monday, March 5, 2012

தமிழகத்தை இருள்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு தடுக்கும்

தமிழகத்தை இருள்மயமாக்கும் முயற்சியை, மத்திய அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்'' என, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தை இருள்மயமாக்க உதயகுமார் தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் துவக்க, மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் நலன் காக்க, பல்வேறு வகையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் யார்? என கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் மீதான தாக்குதல் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. ஈழத் தமிழர் பிரச்னையில் ஐ.நா., சபையில் தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட, தமிழக காங்கிரஸ் முயற்சி மேற்கொள்ளும். தமிழர்கள் நலன்களை முன்னிறுத்தியே மத்திய அரசு செயல்பட வேண்டும் என, தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கருத்தை தமிழக காங்கிரசும் வலியுறுத்தும். இவ்வாறு வாசன் கூறினார்.

No comments:

Post a Comment