flashvortex.

Wednesday, March 14, 2012

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம்: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் வலியுறுத்திவரும் நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

போரில் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடன் சமத்துவடன் வாழ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான மற்றும் நம்பத்தகுந்த விசாரணை நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளேன். இலங்கை குறித்த ஐநா மனித உரிமை கமிஷன் தீர்மானம் குறித்து அனைத்து கட்சிகளிடமும் பேசி வருகிறோம் என பிரதமர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment