flashvortex.

Friday, March 16, 2012

வைரக் கற்களால் உருவான அபூர்வ கார் : அசத்தல் வீடியோ இணைப்பு

இன்றைய மனித வாழ்வில் ஆடம்பரத்தினை விரும்பாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். 

அதிலும் ஆண் - பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் விரும்பும் பொருளாக கார் உள்ளது. புதிய புதிய மொடல்கள் வரும்போது பழையதை விற்று புதியதை கொள்வனவு செய்யவே முயற்சிப்பர் பலர். 

சவுதி அரேபியா ஒரு செல்வம் கொழிக்கும் நாடாகும். அங்கு வசிக்கும் ஒருவருக்கும் விசித்திர ஆசை ஏற்பட்டுள்ளது. 

அதாவது அவர் பாவிக்கும் Mercedes SL ரக காரினை வைரங்களினால் வேய்ந்துள்ளார். 

சுமார் 600 வைரங்களினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 4.8 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. 

இது பலருக்கு கனவாகவே இருக்கும். இதனை தொட்டு பார்க்க உங்களுக்கும் ஆசையா? 1000 அமெரிக்க டொலர்களை செலுத்தினால் நீங்களும் தொட்டுப் பார்க்கலாம். 

இவ் அபூர்வ காரினை காண ஆவலாக உள்ளதா காணொளியை பாருங்கள்.

No comments:

Post a Comment