flashvortex.

Thursday, March 15, 2012

சிறீலங்கா விவகாரம் - மழுப்பல் நிலையினை கடைப்பிடிக்கும் இந்தியா

மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு இன்று அறிவிப்பதாக தெரிவிந்திருந்த நிலையில், நேரடியாக பதிலை சொல்லாமல் மழுப்பல் நிலையினை கடைப்பிடித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த இருநாட்களாக எழுப்பப்பட்ட பிரச்சினையை அடுத்து, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி இன்று எஸ்.எம்.கிருஸ்ணா அறிக்கை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்றுகாலை சபை கூடியபோது மேலவையில், திமுக உறுப்பினர் திருச்சி சிவா இந்தப் பிரச்சினையை எழுப்பினார். 

இதனையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிற்பகல், லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது அறிக்கையைப் வாசித்தார்.

அவரது அறிக்கையின் பெரும்பகுதி சிறிலங்காவுக்கு, இந்தியா வழங்கிய உதவிகளைப் பட்டியலிட்டும் வகையில் அமைந்தருந்தது.

எனினும், ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து அவரது அறிக்கையில் நேரடியான பதில் எதுவும் இருக்கவில்லை.

இந்த அறிக்கையை எஸ்.எம்.கிருஸ்ணா படித்து முடித்ததும், அதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அறிக்கையின் பிரதிகளை கிழித்தெறிந்து விட்டு சபையை விட்டு வெளியேறினர். 

அறிக்கையின் இறுதியில், இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் அது சிறீலங்காவுடனான நமது நாட்டின் வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறினார். 

அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து அவர் நேரடியாக பதில் தரவில்லை.

No comments:

Post a Comment