flashvortex.

Wednesday, March 7, 2012

‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு தேசிய விருது

கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான அழகர்சாமியின் குதிரை இந்தியாவின் 59 ஆவது தேசிய திரைபப்ட விருதுகளில் சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அப்படத்தில் நடித்த அப்புக் குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
தமிழ் மொழியில் வெளியான ‘வாகை சூட வா’ சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதை பெற்றுள்ளது.சிறந்த படத்தொகுப்புக்கான(எடிட்டிங்) விருது ‘ஆரண்ய காண்டம்’ தமிழ் படத்தில் பணியாற்றிய பிரவீண்-ஸ்ரீகாந்த் ஆகியோரிக்கு வழங்கப்படுகிறது. அதே படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருதைப் பெறுகிறார்.
'
பல ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட உலகில் கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி டர்ட்சி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.
மராட்டிய மொழியில் வெளியான தியோல் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் வெளியான சிறந்த படத்துக்கான தேசிய விருது பியாரி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘பியாரி’படத்துக்கு கிடைத்துள்ளது. கடும்போக்கு மதக் கொள்கைகளை கடைப்பிடிப்பதில் ஒரு பெண்மணி எதிர்கொள்ளும் சங்கடங்கள் மற்றும் சவால்களைக் கருவாகக் கொண்டு அந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது
அம்மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் படமும் அதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்த அப்புக் குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது
பஞ்சாபைப் சேர்ந்த குர்விந்தர் சிங், தான் இயக்கிய அன்ஹே கோரே தா டான் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதைப் பெறுகிறார்.
சிறந்த இசையமைப்பாளராக நீல் தத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘ரோஞ்சனா அமி ஆர் ஆஷ்போ நா’ எனும் படத்தின் இசையமைப்புக்காக இவ்விருது அவருக்கு கிடைத்துள்ளது.
சிறந்த காட்சியமைப்புக்கான(ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்)விருது ஷாரூக்கானின் ‘ரா ஒன்’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது.
இவை தவிர திரைபப்டத்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகள் பின்னொரு நாளில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

No comments:

Post a Comment