flashvortex.

Thursday, March 1, 2012

சிரியாவில் 7,500 பேர் பலி அகதிகளாக 25 ஆயிரம் பேர் :ஐ.நா.

சிரியாவில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 7,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அதேநேரம், எதிர்த் தரப்பினர் அதிகம் உள்ள ஹோம்ஸ் நகர் மற்றும் ஹமா மாவட்டத்தின் பிற பகுதிகள், நாட்டின் வட பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சிரிய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வர, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தீர்மானத்திற்கு சீனா ஆதர வளிக்கும் எனத் தெரிகிறது. 


இந்நிலையில், ஐ.நா.,வின் மத்திய கிழக்குக்கான அரசியல் விவகாரங்களின் சார்புச் செயலர் லின் பசோ நேற்று பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய போது, இதுவரை 7,500 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஒரு நாளைக்கு 100 பேர் பலியாகி வருவதாகவும் அவர் கூறினார். ஐ.நா.,வின் அகதிகள் பிரிவின் ஐகமிஷனர் அலுவலகத்தில் இதுவரை, 25 ஆயிரம் பேர் சிரிய அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில், குடிநீர், மின்சாரம், மருத்துவ உதவிகள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பது மிக மிக அரிதாக இருப்பதாகவும் பசோ தெரிவித்தார். ஹோம்ஸ் நகரில் குண்டு வீச்சு களில் இருந்து தப்பிப்பதற்காக வெளியேற முயன்ற 5,000 பேர், சிரிய ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment