flashvortex.

Friday, March 2, 2012

சிறீலங்காவிற்கு எதிரான, ஜெனீவா தீர்மானத்தை எதிர்க்க 500 தற்கொலையாளிகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வர முயற்சிக்கப்படும் யோசனை தோற்கடிக்க தற்கொலை குண்டுதாரிகளாக மாற 500 இளைஞர்கள் தயாராக இருப்பதாக அமைச்சர் பிலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். 

ஜா-எல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜா-எல தொகுதியில் உள்ள சுமார் 500 இளைஞர் தன்னை சந்தித்து, ஜனாதிபதி எதிராக வரும் சக்திகளை எதிர்கொள்ள தம்மால் தற்கொலை குண்டுதாரிகளாக மாற முடியும் என தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தான், அவசரப்பட வேண்டாம். சற்று பொருமையாக இருக்குமாறும், எமக்கு கடவுளின் ஆசி இருப்பதால், தீங்கு எதுவும் ஏற்படாது எனவும் கூறியதாகவும் பிலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment