flashvortex.

Saturday, March 3, 2012

சிறீலங்காவின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு 5ம் திகதியும் ஜெனீவா முன்றலில் அணி திரள்வோம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் சிறீலங்காவிற்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக ஜெனீவா முன்றலில் பல்வேறு கவனயீர்ப்பு பேரணிகள் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இறுதிக்கட்ட போரின் போது மோசமான போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறீலங்கா, தனது இனப்படுகொலையை நியாயப்படுத்தும் முகமாக பல்வேறு நாசகர திட்டங்களை வகுத்து வருகின்றது. அத்துடன் பல்வேறு நாட்டுத் தலைவர்களை தமக்கு சார்பாக வளைத்துப் போடும் சதிகார நடவடிக்கைகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருக்னிறது.

சிறீலங்காவின் இவ் நடவடிக்கையை முறியடிக்க  எதிர்வரும் மார்ச் 05ம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஜ.நா சபைக்கு முன்னால்  இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அணி திரளும் ஐரோப்பிய தமிழர்களுடன் பிரான்ஸ் வாழ் தமிழர்களும் இணைந்து பலம் சேர்க்க அணி திரண்டுள்ளனர்.

இதற்காக பிரான்சில் Gare de Lyon என்ற தொடாருந்து நிலையத்தில்லிருந்து 05/03/2012 அன்று தமிழரின் இவ் அணிதிரள்விற்காக தொடாருந்து (கடுகதி சேவை) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக உலக நாடுகளுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் நாம் ஓயப்போவதில்லை என்பதை உலகுக்கும், குறிப்பாக ஐ.நாவுக்கும் மீண்டுமொரு முறை உரத்து சொல்லி, தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்களை எமக்கு சாதகமான முறையில் மாற்றலாம். அத்துடன், சிறீலங்கா அரசாங்கத்தின் அபாயகரமான திட்டத்தையும் முறியடிப்பு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம் இனத்திற்கு எதிராக சிறீலங்கா அரசினால் மேற்கொண்ட இனப்படுகொலைக்கொதிராகவும், அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அணி திரண்டு வரும் 5ம் திகதி எமதி எதிர்ப்பைக் காட்டி சிறீலங்காவிற்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்திற்கு வலுச்சேர்ப்போம்.

No comments:

Post a Comment