flashvortex.

Friday, March 9, 2012

பரிசில் எரியுண்ட பேருந்து!!!

இன்று  காலை மணிக்கு RATP யின் பேருந்து ஒன்று பரிசின் 20வது பிரிவில் உள்ள GAMBETTA வில் தீக்கிரையானது. இத் தீவிபத்தில் யாரும் பலியாகவோ காயப்படவோ இல்லலை. பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணிகளின் சாட்சியங்களின் படி பேருந்தின் பின் பகுதியிலேயே  தீ பற்றிக் கொண்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின் முடிவாக இது விபத்தினால் ஏற்பட்ட தீயாகவே முடிவு செய்யப்பட்டுள்ளது.


Champ de Mars (VIIIe) ற்கும் Place Gambetta  ற்கும் இடை யே சேவையை மேற்கொள்ளும் 69ம் இலக்கப் பேருந்தானது தீபற்றிய போது தனது பயணப்பாதையின் முடிவிடமான Place Gambetta  வில் நிறுத்தத்தில் நின்றிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணிகள் பேருந்தின் பின்பக்கமுள்ள இயந்திப் பகுதியிலிருந்து புகை வெளியேறுவதை அவதானித்துள்ளனர். பேருந்துச் சாரதி பேருந்திலிரந்த தீயணைப்புக் கருவியின் மூலம் தீயை அணைக்க முயன்ற போதும் தீ பெரிதாகப் பற்றிக் கொண்டது. உடனடியான தீயணைப்பப் படையினர் வந்து தீயை அணைக்க முயன்ற போதும் தீ பேருந்தை முற்றாக எரித்திருந்தது.





 


இதன் காரணமாக Père Lachaise  இலிருந்து Porte de Bagnolet  வரையான வீதிகளில் போக்குவரத்தப் பலமாகப் பாதிக்கப்பட்டது. வாகன நெரிசல் 10மணிக்குப் பின்னரும் தொடர்ந்தது. இப்பொழுது Gambetta ற்கும் Nadeau ற்கான போக்குவரத்து மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment