வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் பெற முடியாததால் மின்வெட்டு அதிகரித்துள்ளது,'' என சங்கரன்கோவில் பிரசாரத்தில் முதல்வர் ஜெ., தெரிவித்தார்.
சங்கரன்கோவில் தொகுதியில் வாகனத்தில் இருந்தவாறு பல இடங்களில் பிரசாரம் செய்து ஜெ., பேசியதாவது: இத்தொகுதி 1991 முதல் அ.தி.மு.க., கோட்டையாக உள்ளது. காங்.,கட்சியின் மறைந்த மத்திய அமைச்சர் அருணாச்சலத்தின் அண்ணன் மகன் தான், தி.மு.க., வேட்பாளர். ஏழு ஏக்கர் நிலத்தை அவர் அபகரித்ததாக, அருணாச்சலத்தின் மனைவி கொடுத்த புகார் வழக்கு, கோர்ட் விசாரணையில் உள்ளது. இது தான் தி.மு.க., வேட்பாளரின் லட்சணம். தன் கட்சி அமைச்சரின் குடும்பத்தை ஏமாற்றிவரை , காங்., ஆதரிப்பது வியப்பாக உள்ளது. உண்மை காங்., தொண்டர்கள் அவருக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். இப்படி ஒரு வேட்பாளரை கருணாதிநிதி அறிவித்ததில் ஆச்சர்யம் இல்லை. நில அபகரிப்பாளர்களை ஊக்குவித்தவரே கருணாநிதி தான். இதுவரை 1,190 நில ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டு, ரூ.224 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டால், மின்பற்றாக்குறை நிலவுகிறது. 600 மெகா வாட் மின்திறன் கொண்ட வடசென்னை விரிவாக்க மின்திட்டம் யூனிட் 1, தலா 500 மெகா வாட் மின் திறன் கொண்ட வள்ளூர் கூட்டு முயற்சி மின் திட்டம் யூனிட் 2 மற்றும் 3; 600 மெகா வாட் மின்திறன் கொண்ட மேட்டூர் அனல் நிலைய மூன்றாம் நிலை, 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின்நிலைய யூனிட் 2ன் மின்திட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் மூலம், மே மாதத்தில் 1,950 மெகா வாட், அக்டோபரில் 600 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். ஜூன் முதல் மின்பற்றாக்குறை குறையும். மின்தொடர் நெருக்கடியால், வெளிச்சந்தையில் மின்சாரம் பெற முடியவில்லை. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உடன்குடி அனல்மின் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தும். மின்உற்பத்தியில் தனி கவனம் செலுத்தி வருகிறேன். மின்பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, ஐ.நா., மனிதஉரிமைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளது. இது தான் தமிழர்கள் மீது காங்., வைத்துள்ள அக்கறை.
சங்கரன்கோவில் தொகுதியில் மனோ கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அரசு கலைக்கல்லூரி, இல்லாதவர்களுக்கு பட்டா , மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கூடுதல் நீர் வழங்கப்படும். சங்கரன்கோவில் மக்கள் சங்கடமின்றி சந்தோஷமாய் வாழ, அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யப்படும். நில அபகரிப்புக்கு பெயர் போன தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, அதன் வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும், என பிரசாரம் செய்தார்.
விஜயகாந்தை மறந்த ஜெ.,
* மதியம் 1 மணிக்கு திருவேங்கடம் பள்ளி மைதானத்தில் ஜெ., ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்
* 12.30 முதல் 1.30 மணி வரை ராகுகாலம் என்பதால், ஹெலிபேட் தளம் அருகே அமைக்கப்பட்ட ஓய்வறையில் மதிய உணவு முடித்துவிட்டு, 1.35க்கு பிரசாரத்தை தொடங்கினார்.
* ஜெ., வயதை குறிக்கும் வகையில், "64' பெண்கள், கும்ப மரியாதை அளித்தனர்
* நன்றி தெரிவித்து, கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர்
* திருச்செந்தூர் கோயில் சார்பாக, தக்கார் மணிகண்டன் ஜெ.,க்கு கும்பமரியாதை அளித்தார். அவரது 90 வயது தாயார் கோட்டையம்மாள், செம்பினால் ஆன வேல் ஒன்றை ஜெ.,க்கு பரிசளித்தார்
* திருவேங்கடம் பிரசாரத்தில் ஜெ., தெலுங்கில் பேசி, ஓட்டு சேகரித்தார்
* பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூடன்குளம் அணுமின்நிலையம், விஜயகாந்த், வைகோ குறித்த ஜெ., ஒரு வார்த்தை கூட பேசவில்லை
* சங்கரன்கோவில் வந்த போது, சங்கரநாராயணர் கோயிலின் ரதவீதிகளை வலம் வந்து, அதன் பின் பிரசாரம் செய்தார்
* சங்கரன்கோவிலில் கோளாறு காரணமாக, ஜெ., பேச்சின் இறுதி பாதியை தான் ஸ்பிக்கரில் ஒலிபரப்பினர். முதல் பாதியை மக்கள் கேட்க முடியவில்லை
* தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க.,வில் இணைவதாக வந்த தகவல் வதந்தியாக முடிந்தது
* குருவிகுளத்தில் தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் தர்மலிங்கம், ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்
* பனவடலிசத்திரம், தேவர்குளத்தில் ஜெ., பேசும் போது மின்வெட்டு ஏற்பட்டதால், "டென்ஷன்' ஆனார்.
* தேவர்குளத்தில் மாலை 6.05 மணிக்கு தன் பிரசாரத்தை முடித்து, ஹெலிகாப்டரில் மதுரை சென்றார். ஐந்து யானைகள் முன்னிலையில், கட்சியினர் அவரை வழியனுப்பி வைத்தனர்.
Thursday, March 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment