பாகிஸ்தானின் கைபர் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் இருந்து குறைந்தபட்சம் 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நிறைய துப்பாக்கி குண்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், அண்மையில் சித்ரவதை செய்யப்பட்டிருந்த அடையாளங்கள் அச்சடலங்களில் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதெல்லாம் அண்மையில் கடத்தப்பட்டிருந்த உள்ளூர்வாசிகள் என்று அதிகாரி ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சடலங்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.இதே பகுதியில் இரண்டு நாட்கள் முன்பும்கூட துண்டிக்கப்பட்ட நிலையிலும், குண்டுக் காயங்களுடனும் 12 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இப்பகுதியில் உள்ள ஆயுததாரிகளுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தனது தாக்குதல்களை உக்கிரமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment