flashvortex.

Sunday, March 18, 2012

ஜெனிவா விவகாரம் : இந்தியாவின் பொறிக்குள் சிறீலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை வைத்து, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப்பட வேண்டுமாயின் சிறிலங்கா 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.
எனினும் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவாறு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்து வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா, இல்லையா என்று இன்னமும் இந்தியா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment