flashvortex.

Thursday, March 8, 2012

மீண்டும் சிறீலங்கா மீது பிரித்தானியா அழுத்தம்

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் துரிதமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், அந்த நாட்டின் நாடாளுமன்ற பொதுச்சபையில் எழுத்து மூலமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அரசியல் தீர்வுத் திட்டம், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன யுத்தத்தின் பின்னரான சிறீலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிகவும் அவசியமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பல காத்திரமான யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை துரித கதியில் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை தொடர்பில் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment