அமெரிக்காவில் நான்கு விமானங்களை மின்னல் தாக்கியது. இதனால் விமானங்கள் உடனே தரையிறக்கப்பட்டன. விமானங்களில் பயணம் செய்த 180 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர். ஹூஸ்டனிலிருந்து 124 பயணிகளுடன் பொகோடாவுக்கு வெள்ளிக்கிழமை மதியம் யுஎஃப் 1001 எனும் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தின் மீது மின்னல் தாக்கியது. உடனே மீண்டும் ஹூஸ்டன் விமான நிலையத்துக்கே திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
அதேபோல் ஹூஸ்டனிலிருந்து அலாபாமாவுக்குப் புறப்பட்ட விமானமும் மீண்டும் தரையிரக்கப்பட்டது. இதில் 47 பயணிகள் இருந்தனர். இரு விமானத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் விமான அறையில் மட்டும் புகை வந்ததாகவும் ஹூஸ்டன் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மேலும் எம்டி-80 மற்றும் ஏர்ட்ரான் 297 விமானங்களும் மின்னல் தாக்கியவுடன் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டன.
Sunday, March 11, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment