சுவிற்சர்லாந்தின் நெடுஞ்சாலை குகையொன்றில் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 சிறுவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 24 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பெஜ்லியம் நாட்டிலிருந்து விடுமுறைக்காக பனிச்சறுக்கல் விளையாடுவதெற்கென சுவிற்சர்லாந்து வந்திருந்த இவர்கள் விடுமுறையை முடித்து கொண்டு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சுமார் 52 பேருடன், வெலைஸ் மாநிலத்தின் நெடுஞ்சாலை குகை ஒன்றின் ஊடாக பயணித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குகைச்சுவரில் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்த இரு ஓட்டுனர்களும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள், ஆம்புலன்ஸ்கள் மூலமாக லௌசான், பேர்ன் உட்பட பிரதான நகரங்களின் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இத்தகவலை கேள்விப்பட்டதும், உயிரிழந்த சிறுவர்கள் பலரின் பெற்றோர்கள் சுவிற்சர்லாந்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இத்தகவலை கேள்விப்பட்டதும், உயிரிழந்த சிறுவர்கள் பலரின் பெற்றோர்கள் சுவிற்சர்லாந்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment